செய்திகள்
போலியோ சொட்டு மருந்து முகாம்

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் - காலை 7 மணிக்கு தொடங்கியது

Published On 2020-01-19 01:46 GMT   |   Update On 2020-01-19 01:46 GMT
நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
சென்னை:

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன் வாடிமையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இதில் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன.

போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்களில் 1,652 பயண வழி மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News