செய்திகள்
கோப்பு படம்

ஆந்திராவில் மேலும் 10 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

Published On 2021-06-07 13:34 GMT   |   Update On 2021-06-07 13:34 GMT
ஆந்திராவில் அரசு அலுவலகங்கள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
விசாகபட்டினம்:

ஆந்திராவில் சோதனைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது கொரோனா தொற்றுக்கு ஆளாவோர் விகிதம் 25 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக  குறைந்துள்ளது. இருப்பினும் இன்று காலை நிலவரப்படி கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 426 ஆக உள்ளது.



இந்நிலையில் முதல் மந்திரி  ஜெகன்மோகன், ஜூன் 20ஆம் நாள் காலை வரை ஊரடங்கை நீட்டித்துள்ளார். ஜூன் 10 முதல் ஊரடங்கு நாட்களில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இன்றியமையாப் பொருட்கள் விற்கும் கடைகளைத் திறக்கவும், பொதுமக்கள் பொருட்களை வாங்கிக் கொள்ளவும் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.


அரசு அலுவலகங்கள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News