உள்ளூர் செய்திகள்
சபாநாயகர் அப்பாவு

சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புவது குறித்து சபாநாயகர் அப்பாவு ஆலோசனை

Published On 2021-12-07 09:23 GMT   |   Update On 2021-12-07 10:24 GMT
சபாநாயகர் அப்பாவு தலைமைச்செயலகத்தில் தொழில்நுட்பத்துறை முதன்மை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சென்னை:

தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறும்போது அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகள் எம்.எல்.ஏ.க்கள் பேசுவது அனைத்தும் வீடியோவாக ஒளிப்பதிவு செய்யப்பட்டு அதில் குறிப்பிட்ட பதிவுகள் தொலைக்காட்சிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

பாராளுமன்றத்தில் உள்ளது போல் சட்டசபை கூட்டத்தொடரையும் நேரடியாக ஒளிபரப்பு செய்யவேண்டும் என்று பல்வேறு கட்சிகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றன.

ஆனால் தொழில் நுட்ப பிரச்சினை உள்பட பல்வேறு காரணங்களால் அவை செயல்படுத்தப்படாமல் இருந்தது.

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வந்த பிறகு சட்டசபை நிகழ்ச்சிகள் தற்போது கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு விட்டது.

இதற்கேற்ப சட்டவிதிகள் திருத்தம் செய்யப்பட்டு எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் சட்டசபையில் கம்ப்யூட்டருடன் லேப்டாப் வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடுத்த கட்டமாக சட்டசபை நிகழ்ச்சிகளை பொதுமக்களுக்கு நேரலையாக தொலைக்காட்சியில் காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இது சம்பந்தமாக சட்டசபை சபாநாயகர் அப்பாவு, தலைமைச்செயலகத்தில் தொழில்நுட்பத்துறை முதன்மை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் துணை சபாநாயகர் பிச்சாண்டி, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.



Tags:    

Similar News