செய்திகள்
கோப்புபடம்

கரும்பு அறுவடைக்கு எந்திரங்களை பயன்படுத்தும் விவசாயிகள்

Published On 2021-07-16 08:03 GMT   |   Update On 2021-07-16 08:03 GMT
விளைநிலங்களில் ஆலை அமைத்து வெல்லம் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் வெகுவாக குறைந்து விட்டனர்.
உடுமலை:

விளைநிலங்களில் ஆலை அமைத்து வெல்லம் உற்பத்தி செய்யும்
தொழிலாளர்கள் வெகுவாக குறைந்து விட்டனர். உடுமலை ஏழு குள பாசனப்பகுதிகளில் கரும்பு சாகுபடி பிரதானமாக இருந்தது. அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும்,வெல்லம் உற்பத்திக்கும் பல ஆயிரம் ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்தனர்.

இந்நிலையில் நிலையில்லாத கரும்பு மற்றும் வெல்லம் விலை காரணமாக பாதித்த விவசாயிகள் மாற்றுச்சாகுபடிக்கு சென்றனர்.தொடர்ந்து கரும்பு சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு  தொழிலாளர் தட்டுப்பாடு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.விளைநிலங்களில் ஆலை அமைத்து வெல்லம் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் வெகுவாக குறைந்து விட்டனர். அறுவடை மற்றும் தோகை உரித்தல்  உள்ளிட்ட பணிகளுக்கும் ஆட்கள் கிடைப்பதில்லை.இதனால்  கடலூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்களை வரவழைத்து கரும்பு அறுவடை பணிகளில் ஈடுபடுத்துகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
 
கரும்பு அறுவடை பணிக்கு தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. குறித்த நேரத்தில் அறுவடை செய்யாவிட்டால் கரும்பின் பிழிதிறன், சர்க்கரை கட்டுமானம் குறையும்.  வெல்லம் உற்பத்தியில்  பாதிப்பு ஏற்படும். அதிக பரப்பளவில்  கரும்பு சாகுபடி இருந்தால் மட்டுமே பிற மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வர முடியும். இப்பிரச்சினைக்கு தீர்வாக அறுவடை எந்திரங்களை பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.பிற மாவட்டங்களில் அறுவடைக்கு பயன்படுத்தும் எந்திரங்கள் குறித்த விபரங்களை சேகரித்து வருகிறோம். இதற்கான வழிகாட்டுதல்களை வேளாண் பொறியியல் துறையினர் வழங்கினால் உபயோகமாக இருக்கும் என்றனர்.  
Tags:    

Similar News