தொழில்நுட்பச் செய்திகள்
ஜியோமி 12 சீரிஸ்

பயனர்களை ஏமாற்றிய ஜியோமி நிறுவனம்- கொந்தளிக்கும் ஸ்மார்ட்போன் ரசிகர்கள்

Published On 2022-03-29 11:56 GMT   |   Update On 2022-03-29 11:56 GMT
இந்த குற்றச்சாட்டில் ஏற்கனவே சாம்சங், ஒன்பிளஸ் ஆகிய நிறுவனங்கள் சிக்கியுள்ள நிலையில், தற்போது ஜியோமி மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
சாம்சங் சமீபத்தில் வெளியிட்ட சாம்சங் கேலக்ஸி 22 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் பிற செயலிகளின் செயல்பாட்டை குறைத்து சில செயலிகளின் செயல்பாட்டை மட்டும் அதிகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் தற்போது ஜியோமியும் இந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ளது.

ஜியோமி சமீபத்தில் வெளியிட்ட ஜியோமி 12 ப்ரோ, ஜியோமி 12எக்ஸ் போன்களில் இந்த பிரச்சனை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோமி போன்களில் சில செயலிகள் மட்டும் கேம்களாக கருத்தப்பட்டு பிராசஸர்கள் வேகமாக இயங்கும் வகையில் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பிற செயலிகளின் செயல்பாடு குறைக்கப்படுவதாகவும், செயற்கையாக போனின் செயல்வேகத்தை அதிகரித்து காட்டுவதாகவும் ஜியோமியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒன்பிளஸ் நிறுவனமும் இந்த குற்றச்சாட்டில் சிக்கிய நிலையில், சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்கள் போட்டியாளர்களை எதிர்கொள்வதற்கு போலியாக ஸ்மார்ட்போன் செயல்வேகத்தை உயர்த்தி காட்ட இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபடுவதாக கருதப்படுகிறது.
Tags:    

Similar News