தொழில்நுட்பம்

4ஜி டவுன்லோட்களில் தொடர்ந்து அசத்தும் ரிலையன்ஸ் ஜியோ

Published On 2019-03-17 15:11 GMT   |   Update On 2019-03-17 15:11 GMT
இந்தியாவில் அதிவேக 4ஜி டேட்டா டவுன்லோடு வழங்கும் நிறுவனங்களின் பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. #RelianceJio
இந்தியாவில் அதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தில் இருக்கிறது. பிப்ரவரி 2019 வரையிலான காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ 20.9Mbps வேகத்தில் 4ஜி டவுன்லோடு வழங்கியிருக்கிறது. 

மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையின் படி ரிலையன்ஸ் ஜியோ அதிவேக 4ஜி டேட்டா வழங்குகிறது. பாரதி ஏர்டெல் நிறுவனம் பிப்ரவரி 2019 இல் 9.4Mbps வேகத்தில் 4ஜி டேட்டா வழங்கியிருக்கிறது. இதைத் தொடர்ந்து வோடபோன் நிறுவனம் 6.8Mbps வேகத்தில் டேட்டா வழங்கியிருக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களை தொடர்ந்து ஐடியா நிறுவனம் 5.7Mbps வேகத்தில் 4ஜி டேட்டா வழங்கியிருக்கிறது. டிராயின் மைஸ்பீடு தளத்தில் வெளியாகியிருக்கும் புதிய தகவல்களில் ரிலையன்ஸ் ஜியோ அதிவேக 4ஜி டேட்டா வழங்கியிருக்கிறது. 


ஜனவரி 2019 இல் ரிலையன்ஸ் ஜியோவின் சராசரி டேட்டா வேகம் 18.8Mbps ஆக இருந்தது. அதிவேக டேட்டா வழங்குவதில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்து வருவதை போன்று ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஜனவரி 2019 இல் ஏர்டெலின் டேட்டா வேகம் 9.5Mbps ஆக இருந்தது. 

வோடபோன் நிறுவனம் பிப்ரவரியில் 6.7Mbps வேகத்தில் 4ஜி டேட்டா வழங்கியிருக்கிறது. இந்நிறுவனம் ஜனவரி மாதத்தில் 6.8Mbps வேகத்தில் டேட்டா வழங்கியிருந்தது. வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் ஒன்றிணைந்துவிட்டதால், டிராய் தனது வேகப்பட்டியிலில் இருநிறுவனங்களை தனித்தனியாகவே பட்டியலிடுகிறது.

ஐடியா நிறுவனம் 5.5Mbps வேகத்தில் 4ஜி சேவை வழங்கியிருக்கிறது. வோடபோன் நிறுவனம் பிப்ரவரி மாதத்தில் 6.0Mbps வேகத்தில் டேட்டா வழங்கியுள்ளது. ஜனவரி மாதத்தில் வோடபோன் 5.4Mbps வேகத்தில் டேட்டா வழங்கியது. 
Tags:    

Similar News