செய்திகள்
டி.ஆர்.பாலு

பொய்யுரு தொழில்நுட்பம்- திமுக எம்பி கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பதில்

Published On 2021-07-29 13:23 GMT   |   Update On 2021-07-29 13:23 GMT
பொய்யுறு தொழில்நுட்பத்தால் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதாக டி.ஆர்.பாலு எம்பி தெரிவித்தார்.
புதுடெல்லி:

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக எம்பி டி.ஆர்.பாலு, குரலை மாற்றி பேசி மோசடி செய்யும் பொய்யுரு தொழில் நுட்பத்தை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பினார். பொய்யுறு தொழில்நுட்பத்தால் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், மோசடி செய்தால் தண்டனை கிடைக்கும் என்றார்.

ஒருவருடைய அடையாளத்தை மாற்றிக் காண்பிப்பது சட்டத்திற்கு புறம்பான குற்றம். பொய்யுரு தொழில் நுட்பத்தின் மூலம் வரும் ஆபத்துகளை தடுக்க, வழிகாட்டு விதிமுறை வகுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
Tags:    

Similar News