தொழில்நுட்பம்
கேலக்ஸி ஏ சீரிஸ்

உலகின் அதிகம் விற்பனையான டாப் 5 ஸ்மார்ட்போன்கள்

Published On 2020-06-21 05:45 GMT   |   Update On 2020-06-20 12:16 GMT
சர்வதேச சந்தையில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களின் டாப் 5 மாடல்களின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



2019 ஆண்டு துவங்கியது முதல் சாம்சங் நிறுவனம் அதிகளவு கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய துவங்கியது. வெளியான கேலக்ஸி ஏ சீரிஸ் வெற்றி பெற்றதால், தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனம் சந்தையில் இழந்த தனது பங்குகளை மீட்டெடுத்துள்ளது.

ஒமிடா எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி 2019 ஆண்டு உலகில் அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடலாக கேலக்ஸி ஏ10 இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் சாம்சங் முதலிடம் பிடித்துள்ளது. 

ஒட்டுமொத்தமாக அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் XR மற்றும் ஐபோன் 11 முன்னணி இடங்களை பிடித்துள்ளன. 2019 ஆண்டு சர்வதேச அளவில் சுமார் 137 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி இருக்கின்றன. இதில் 4.63 கோடி யூனிட்கள் ஆப்பிள் ஐபோன் XR ஆகும். 



இது சந்தையில் விற்பனையான ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன்களில் 3 சதவீதம் ஆகும். இதைத் தொடர்ந்து ஐபோன் 11 ஸ்மார்ட்போன் 3.73 கோடி யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. இது சந்தையில் 2.1 சதவீத பங்குகளை பெற்றுள்ளது.

ஸ்மார்ட்போன் சந்தையில் கடந்த ஆண்டு நிலவரப்படி உலகில் அதிகம் விற்பனையான ஐந்து ஸ்மார்ட்போன்களில் இரு மாடல்கள் ஆப்பிள் நிறுவனம் உற்பத்தி செய்தி இருக்கிறது. இதுதவிர 2019 ஆண்டு விற்பனையான ஸ்மார்ட்போன்கள் கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்கள் ஆகும்.

கேலக்ஸி ஏ10 கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆகும். கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனை சுமார் 3.03 கோடி பேர் வாங்கியுள்ளனர். இது சந்தையில் 1.8 சதவீதம் பங்குகளை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து கேலக்ஸி ஏ50 மற்றும் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களின் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளன.
Tags:    

Similar News