செய்திகள்
கோப்புப்படம்

மராட்டியத்தில் இன்று 58,952 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

Published On 2021-04-14 18:19 GMT   |   Update On 2021-04-14 18:19 GMT
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, மராட்டிய மாநிலத்தில் கொரோனா பரவல் உச்சமடைந்து வருகிறது.
மும்பை:

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, மராட்டிய மாநிலத்தில் கொரோனா பரவல் உச்சமடைந்து வருகிறது. இந்நிலையில், மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பரவலின் இன்றைய நிலவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 58 ஆயிரத்து 952 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 78 ஆயிரத்து 160 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 லட்சத்து 12 ஆயிரத்து 70 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலத்தில் வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்றவர்களில் இன்று ஒரேநாளில் 39 ஆயிரத்து 624 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், மராட்டியத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 29 லட்சத்து 5 ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு அம்மாநிலத்தில் இன்று 278 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆயிரத்து 804 ஆக அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News