தொழில்நுட்பச் செய்திகள்
வோடஃபோன்

சுமார் 8000 சிம்கார்டுகளை பிளாக் செய்த வோடஃபோன்-ஐடியா: ஏன் தெரியுமா?

Published On 2022-03-23 06:17 GMT   |   Update On 2022-03-23 06:17 GMT
மத்திய பிரதேச போலீசார் வோடஃபோன் ஐடியா, ஏர்டெல், பி.எஸ்.என்.எல் ஆகிய நிறுவனங்களுக்கு உத்தரவிட்டனர்.
மத்திய பிரதேசத்தில் போலி அடையாள சான்றிதழ்களை கொண்டு வாங்கப்பட்ட சிம் கார்டுகளை தடை செய்யக்கோரி சைபர் போலீசார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டனர்.

இதையடுத்து வோடஃபோன் ஐடியா நிறுவனம் சுமார் 8000 சிம்கார்டுகளை பிளாக் செய்துள்ளது.

மத்திய பிரதேசம் குவாலியரில் கார் விற்பனை செய்வதாக போலி விளம்பரங்களை கொடுத்து, பொதுமக்களை ஏமாற்றி கும்பல் ஒன்று மோசடி செய்து வந்துள்ளது. அந்த கும்பலின் போன் நம்பர்களை ஆராய்ந்த போது அது வேறு நபர்களின் பெயர்களில் இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த கும்பல் வேறு நபர்களின் அடையாள அட்டைகளை கொண்டு சிம் கார்ட்டுகளை பெற்றுள்ளனர். அவர்களுக்கு 8 பேர் வரை உதவி செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தி வாங்கப்பட்ட சிம்கார்டுகளை பிளாக் செய்யக்கோரி வோடஃபோன் ஐடியா, ஏர்டெல், பி.எஸ்.என்.எல் ஆகிய நிறுவனங்களுக்கு போலீசார் வலியுறுத்தினர். 

இதையடுத்து வோடஃபோன் நிறுவனத்திடம் இருந்து மட்டும் சுமார் 8000 சிம் கார்டுகள் வரை மோசடி கும்பல் பெற்றுள்ளது. அந்த சிம்கார்டுகளை வோடஃபோன் தடை செய்தது.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அடையாளங்களை சரிபார்த்தபின்னரே சிம்கார்ட்டை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News