வழிபாடு
சிவன்

பங்குனி உத்திர நாளில் பக்தர்களை தேடி வரும் சிவன்

Published On 2022-03-18 08:18 GMT   |   Update On 2022-03-18 08:18 GMT
பங்குனி உத்திர நாளன்று காவிரிஆற்று மணலில் வீற்றிருக்கும் தெய்வங்களுக்கு விசேஷ அலங்காரங்களும், அபிஷேக ஆராதனைகளும் செய்யப்படுகின்றன.
பொதுவாக பக்தர்கள் திருவிழா நாட்களில் தெய்வ தரிசனம் காண ஆலயங்களுக்கு செல்வது வழக்கம். ஆனால் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி சிவாலயத்தில் பங்குனி உத்திர நாளில் சிவனும், அம்பிகையும் மக்கள் இருக்கும் இடங்களுக்கு வரும் புதுமை நடந்து வருகிறது.

பங்குனி உத்திர நாளன்று காவிரிஆற்று மணலில் வீற்றிருக்கும் தெய்வங்களுக்கு விசேஷ அலங்காரங்களும், அபிஷேக ஆராதனைகளும் செய்யப்படுகின்றன.
விழாநாளில் சில பக்தர்கள் நாவில் அலகு குத்திக் கொள்கிறார்கள். வேறு சிலர் தீ மதிக் கிறார்கள். இந்த ஊரில் பல ஜாதி, மதத்தைச் சார்ந்தவர்கள் ஒற்றுமையோடு வாழ்ந்து வருவதால் இவ்வாலயத்தில் நடைபெறும் திருவிழாக்களுக்கு அனைவரும் மத வேறுபாடு இல்லாமல் வருகிறார்கள். முஸ்லீம்கள் கூட சிவாலய விழாக் களுக்கு வருவது உண்டு!

முன்னொரு காலத்தில் இந்திரன் முதலிய தேவர்கள் இந்த தலத்திற்கு வந்து அக்னி கடவுளையும், சவுந்தர நாயகியையும் வணங்கினார்கள். அப்பொழுது அக்னி தேவன் தொட்டப் பொருட்கள் சுட்டெரிக்கப்பட்டு நாச மானது அந்தப் பழியிலிருந்து விடுபட வழி இல்லையா என்று அக்னிதேவன் வேண்டினான். உடனே சிவபெருமான், அக்னி தேவன் முன் தோன்றி இங்குள்ள தலத்தில் ஒரு குளம் அமைத்து அதற்கு உன் பெயரை இடு! அந்தக் குளத்து நீரைக்கொண்டு வந்து எனக்கு அபிஷேகம் செய்து என்னை வழி பட்டால் உனக்கு அந்தப் பழிதீரும். அதில் நீராடும் மக்களுக்கும் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கும் என்று அருளினார்.
அப்படிப்பட்ட அக்னி தேவ னால் உண்டாக்கப்பட்ட மகிமை பெற்ற குளம் கொண்ட தலம் திருக்காட்டுப்பள்ளி.

இங்கு திருஞான சம்பந் தரும், திருநாவுக்கரசரும் வந்து சன்னதியின் முன் அமர்ந்து பதிகங்கள் பாடியிருக்கிறார்கள். அவர்களின் பக்திப் பாடல்கள் பிரகாரச் சுவர்களில் பொறிக்கப்பட்டு உள்ளன.

இந்தத் திருத்தலத்தில் இறைவனுக்கு இடது பக்கத்தில் பிரம்மாவிற்கு தனி சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. பிரம்மனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கிய இடம் இது. அவர் இங்கு வந்து தனக்கும் மும்மூர்த்திகளில் ஒருவர் என்னும் அங்கீகாரம் தரப்படவேண்டும் என்று பிரார்த்தனை செய்யவே அப்படியே சிவன் கூற அவருக்கு தனி இடம் தந்து தங்க அனுமதித்தார். பிரம்மா விற்கு தமிழ்நாட்டில் முதல் தனி சன்னதி அமைந்த இடம் திருக்காட்டுப்பள்ளியே ஆகும்.
Tags:    

Similar News