செய்திகள்
அரியானா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ்

பாக். வெற்றியை கொண்டாடியவர்களின் டி.என்.ஏ. இந்தியராக இருக்க முடியாது: அரியானா அமைச்சர் காட்டம்

Published On 2021-10-26 10:13 GMT   |   Update On 2021-10-26 10:51 GMT
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற்றதற்கு இந்தியாவில் பட்டாசு வெடித்து கொண்டாடியவர்களை அரியானா அமைச்சர் சாடியுள்ளார்.
டி20 உலகக்கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் ரசிகர்கள்  இந்தியாவின் பல பகுதிகளிலும் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரியானா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ், "சொந்த நாட்டில் மறைந்திருக்கும் துரோகிகளிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து, மேலும் அவர் டுவிட்டர் பக்கத்தில், "கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றியை இந்தியாவில் பட்டாசு வெடித்து கொண்டாடியவர்களின் மரபணு இந்தியராக இருக்க முடியாது. தங்களது வீடுகளில் ஒளிந்துக் கொண்டிருக்கும் துரோகிகளிடம் இருந்து கவனமாக இருங்கள் " என்று குறிப்பிட்டிருந்தார்.
Tags:    

Similar News