செய்திகள்
ஜிம்பாப்வே இலங்கை கிரிக்கெட் தொடர்

இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாட இலங்கை அணி ஜிம்பாப்வே செல்கிறது

Published On 2020-01-09 10:20 GMT   |   Update On 2020-01-09 10:20 GMT
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்று பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
அரசியல் தலையீடு காரணமாக ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டு பல பிரச்சனைகளை சந்தித்தது. இதனால் ஐசிசி அந்த அணிக்கு தடைவிதித்தது. அதன்பின் தடையை விலக்கிக்கொண்டது.

ஜிம்பாப்வே அணியின் நிர்வாகத்தை முற்றிலும் மாற்றியமைக்க தீவிரம் காட்டப்பட்டது. இதனடிப்படையில்தான் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிக்கான கேப்டனாக சிபாபாவையும், டெஸ்ட் அணிக்கு சீன் வில்லியம்ஸையும் கேப்டனாகவும் நியமித்தது. முந்தைய கேப்டன் மசகட்சா இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இலங்கை அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயண்ம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் என தெரிவித்துக்கப்பட்டுள்ளது.

முதல் போட்டி வரும் 19-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையும், 2-வது போட்டி 27-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையும் நடக்கிறது. இரண்டு போட்டிகளும் ஹராரே மைதானத்தில் நடத்தப்படுகிறது.
Tags:    

Similar News