பொது மருத்துவம்
கிரீன் டீ

அழகு.. இளமை.. ஆனந்தம்.. கிரீன் டீ..

Published On 2021-12-17 04:37 GMT   |   Update On 2021-12-17 08:32 GMT
கிரீன் டீயின் உயர் தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் அபாயகரமான பிரீ ரேடிகல்களை சமன்படுத்தி, நம் உடலின் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கின்றன.
தேயிலை கிரீன் டீ, பிளாக் டீ, ஒயிட் டீ, மஞ்சள் டீ, ஊலாங் டீ என பல்வேறு வகைகளாக அவதாரம் எடுத்து உள்ளது. இவை அனைத்துமே தேயிலையில் இருந்தே வந்தாலும், தயாரிக்கப்படும் முறைகளாலும், பதப்படுத்தப்படும் முறைகளாலும் வேறுபடுகின்றன. இவற்றின் விளைவாக பெரும்பாலான ‘டீ’ வகைகள் நல்ல மருத்துவ குணங்களை இழந்து விட, இவற்றுள் தன்மை மாறாமல் அப்படியே நம் கைகளில் கிடைப்பது ‘கிரீன் டீ’ மட்டுமே.

‘கிரீன் டீ’ யின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ‘ஆன்டி ஆக்சிடென்ட்கள்’ தான். இதனை ‘நோய் எதிர்ப்பு சக்தி’ என்கிறோம். பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக இதில் இருக்கிறது. சுருக்கமாக சொன்னால், ஒரு கப் கிரீன் டீ, சில கப் ஆப்பிள் ஜூஸுக்கு சமம்.

கோடையின் வெப்பம், புற ஊதாக்கதிர், மாசடைந்த காற்று, சிகரெட் மற்றும் வாகன புகை, அழுக்கான தண்ணீர் என வெளிச்சூழல்கள் அனைத்தும் நம் உடலில் ‘பிரீ ரேடிகல்ஸ்’ என்னும் கெடுதல் தரும் வேதிப்பொருட்களை ஏற்படுத்துகின்றன. இவைகளே நம் உடலின் ஒவ்வொரு செல்லையும் பாதித்து, சீரழித்து சிறிய நோய்கள் முதல் இதய, புற்று நோய்கள் வரை அனைத்து பெரிய நோய்களுக்கும் வழிவகுப்பதோடு சீக்கிரமே நம்மை முதுமை நிலைக்கும் தள்ளி விடுகின்றன.

கிரீன் டீயின் உயர் தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் அபாயகரமான பிரீ ரேடிகல்களை சமன்படுத்தி, நம் உடலின் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கின்றன. எனவே தான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். சீனர்கள் பெருமளவு கிரீன் டீயை பயன்படுத்தி வருகிறார்கள்.

கிரீன் டீ யின் நன்மைகள்:

- ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

- உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

- உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்து தேவையற்ற கொழுப்பை குறைத்து உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.

- ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.

- இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

- ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

- உடலின் திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.

- புற்று நோய் வராமலும், புற்றுநோய் செல்களை வளர விடாமலும் தடுக்கிறது.

- எலும்பில் உள்ள தாதுப்பொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.

- பற்களில் ஏற்படும் பல் சொத்தையையும், வாய் துர்நாற்றத்தையும் நீக்குகிறது.

- நினைவாற்றலை அதிகரிக்கிறது.

- சருமத்தை பாதுகாத்து இளமையாக வைக்க உதவுகிறது. பருக்கள் வராமலும் தடுக்கிறது.

- வயதானவர்களுக்கு வரும் ஞாபக மறதி மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்களையும் தடுக்கிறது.

- மன அழுத்தத்திற்கும், தலைவலிக்கும் மருந்தாக செயல்படுகிறது.

- மூட்டு வாதத்தை குணமாக்க உதவுகிறது.

- உடலில் ஏற்படும் புண்கள், காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது.

இப்படி பலவிதமான பலன்கள் கிரீன் டீயில் இருப்பதால் இதனை அளவோடு பலரும் பருகலாம்.
Tags:    

Similar News