செய்திகள்
கோப்புப்படம்

நாவல்பழங்கள் விற்பனை அமோகம்

Published On 2021-06-21 08:24 GMT   |   Update On 2021-06-21 08:24 GMT
நாவல் பழங்கள் ஆயக்குடி மொத்த விற்பனை நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து சில்லரை வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
உடுமலை:

தமிழகத்தில் கோடை காலம் முடிவுறும் நிலையில் தற்போது நாவல்பழம் மற்றும் பலாப்பழம் சீசன் துவங்கியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையைஒட்டியுள்ள பொள்ளாச்சி, ஆனைமலை, பழனி சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நாவல்பழம் சாகுபடி செய்யப்படுகிறது.இங்கிருந்து வரும் நாவல் பழங்கள் ஆயக்குடி மொத்த விற்பனை நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து சில்லரை வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். 

கிலோ ஒன்றுக்கு ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது.இதேபோல் ஹைபிரிட் என்று சொல்லப்படும் நாவல்களும் ஆந்திரா,ஓசூர், கர்நாடகா பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு, ரத்தக்கொதிப்பு உள்ளவர்களுக்கு மிக ஏற்றதாக நாட்டு நாவல் பழங்கள் உள்ளன.இதனால் பொதுமக்கள் பெருமளவில் நாவல் பழங்களை வாங்கி செல்கின்றனர். தற்போது சீசன் களைகட்ட தொடங்கி உள்ள நிலையில் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் நாவல் பழம் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
Tags:    

Similar News