செய்திகள்
கோப்புபடம்

அஞ்சல் காப்பீடு முகவர்கள் நியமனம்

Published On 2021-07-21 10:04 GMT   |   Update On 2021-07-21 10:04 GMT
ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், அதிகாரிகள் எனில் 65 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
திருப்பூர்:

திருப்பூர் தபால் கோட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடு திட்டத்தின் கீழ் நேரடி முகவர்களாக பணிபுரிய அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கோட்ட கண்காணிப்பாளர் கலைச்செல்வி கூறியதாவது:-

ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், முன்னாள் படை வீரர்கள், மகிலா மண்டல் பணியாளர்கள், சுயதொழில் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள், 18 முதல் 50 வயதுடையவர்கள் அனைவரும் திருப்பூர் தபால் கோட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடு திட்டத்தின் கீழ் நேரடி முகவர்களாக பணிபுரிய தகுதியானவர்கள் ஆவர். 

பத்தாம் வகுப்பு தேர்ச்சி அவசியம். ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், அதிகாரிகள் எனில் 65 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் துறை ரீதியான எந்த வித ஒழுங்கு நடவடிக்கைகளும் நிலுவையில் இருக்க கூடாது.

மேட்டுப்பாளையம் பகுதி மக்களுக்கான நேர்காணல் மேட்டுப்பாளையம் தலைமை தபால் நிலையத்தில் வரும் 24-ந் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. தாராபுரம் பகுதி மக்களுக்கு தாராபுரம் தலைமை தபால் நிலையத்தில் வரும் 29-ந் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது.

திருப்பூர் பகுதி மக்களுக்காக ரெயில் நிலையம் அருகேயுள்ள தலைமை தபால் கோட்ட அலுவலகத்தில் ஆகஸ்ட் 2-ந் தேதி காலை 10 மணிக்கும் நடக்கிறது. ஆர்வமுள்ளோர் தங்கள் வயது சான்றிதழ், கல்வி சான்றிதழ், ஆதார் நகல் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் 2 பாஸ்போர்ட் அளவு போட்டோ, ‘பயோடேட்டா’ விவரங்களுடன் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News