உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

உடுமலை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இடநெருக்கடியால் பணியாளர்கள் அவதி

Published On 2022-01-11 06:33 GMT   |   Update On 2022-01-11 06:33 GMT
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் எப்போதும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.
உடுமலை:

உடுமலை நகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு டாக்டர், செவிலியர்கள், மருந்தாளுநர், மருத்துவ பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இங்கு  தினமும், 100க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், உள்நோயாளிகளாவும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் எப்போதும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. ஆனால் போதிய இட வசதி இல்லாத காரணத்தால் மருத்துவப்பணியாளர்களும், நோயாளிகளும் பாதிக்கின்றனர். 

இதபோல் ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ள வீதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே போதிய வசதியுடன் கூடிய இடத்துக்கு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேப்போல் குறிச்சிக்கோட்டை துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தி டாக்டர், செவிலியர் நியமிக்க வேண்டும். பொது கழிப்பிடங்களை பராமரித்து தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என பா.ஜ.க.வினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News