செய்திகள்
நீட் தேர்வு

நாடு முழுவதும் தொடங்கியது நீட் தேர்வு

Published On 2021-09-12 08:48 GMT   |   Update On 2021-09-12 08:48 GMT
தமிழ்நாட்டை பொறுத்தவரையில், 40 ஆயிரத்து 376 மாணவர்கள், 70 ஆயிரத்து 594 மாணவிகள், ஒரு திருநங்கை என மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 971 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர்.
சென்னை:

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு இன்று பிற்பகல் தொடங்கியது.

நாடு முழுவதும் 3,862 மையங்களில் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு இடையில் இத்தேர்வை எழுதுகின்றனர்.  தமிழ்நாட்டை பொறுத்தவரையில், 40 ஆயிரத்து 376 மாணவர்கள், 70 ஆயிரத்து 594 மாணவிகள், ஒரு திருநங்கை (தஞ்சையில்) என மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 971 பேர் தேர்வு எழுதுகின்றனர். 



பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய இந்த ‘நீட்’ தேர்வு மாலை 5 மணியுடன் நிறைவுபெறுகிறது.

‘நீட்’ தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் புதிதாக ‘என்95' முக கவசம் வழங்கப்பட்டது.  மேலும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை உள்பட கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வின்போது பின்பற்றப்பட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.

Tags:    

Similar News