உள்ளூர் செய்திகள்
ஆம்பூர் சுற்றுப்புற பகுதியில் விளையும் நுங்கு பெங்களூருக்கு ஏற்றுமதி.

ஆம்பூர் பகுதியில் இருந்து பெங்களூருக்கு ஏற்றுமதியாகும் நுங்குகள்

Published On 2022-05-05 09:30 GMT   |   Update On 2022-05-05 09:30 GMT
ஆம்பூர் பகுதியில் இருந்து பெங்களூருக்கு நுங்குகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஆம்பூர்:

ஆம்பூர் சுற்றுப்புற கிராம பகுதிகளில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் நகர பகுதிக்கு கண்டோன்மண்ட் ெரயில்வே ஸ்டேஷன் சிட்டி ரயில்வே ஸ்டேஷன் கிருஷ்ணராஜபுரம் ெரயில்வே ஸ்டேஷன் சிவாஜி நகர் பஸ்காந்திநகர் மெஜஸ்டிக் ஆகிய பகுதிகளுக்கு நுங்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஆம்பூர் பகுதிகளில் ஒரு நுங்கின் விலை 4 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோடை காலமான நேற்று முதல் வருகிறது. 21 நாட்களுக்கு அக்னி வெயில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் அதிகமாக உள்ள நிலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட்டு அதிலிருக்கும் தண்ணீரை உடம்பில் வேக்குரு மேல் பூசுவார்கள் அதற்கு உடலில் உள்ள ரத்தக் கட்டி குணமாகும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் ஏற்றுமதி செய்யப்படும் நுங்கு தமிழ்நாட்டில் 4 ரூபாய்க்கு விற்கப்படும் நுங்கு கர்நாடகாவில் ஒரு நுங்கு 10 ரூபாய் விற்பனை செய்யப்படுவதால் ஆம்பூரை சுற்றியுள்ள விவசாயிகள் தங்கள் நிலத்தில் உள்ள பணை மரத்தில் இருந்து நுங்கு காய்களைப் பறித்து கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதிக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

 இதனால் ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் களிலும் மாட்டு வண்டிகளிலும் அடுக்கிவைத்து கர்நாடகா மாநிலம் செல்லும் லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்ய இரவு பகலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் நுங்கை 5,10,25,50 என பாக்கெட்டுகள் மூலம் ரெயில் பயணிகளுக்கு  ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை ஆகிய ெரயில் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

இதேபோன்று தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஸ் நிலையங்கள் சாலை ஓரங்களில் நுங்கு வியாபாரம் அமோகமாக நடைபெறுகிறது. நுங்கு விவசாய பணப்பயிர் ஒரு நல்ல வருவாய் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News