செய்திகள்
தேசிய மகளிர் ஆணையம்

கர்ப்பிணி பெண்களுக்கு உதவுவதற்காக வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது தேசிய மகளிர் ஆணையம்

Published On 2021-04-29 12:32 GMT   |   Update On 2021-04-29 12:32 GMT
கொரோனா 2-வது அலையில் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், அவர்களுக்கு உதவ தேசிய மகளிர் ஆணையம் முன்வந்துள்ளது.
இந்தியாவில் 2-வது அலை காரணமாக கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிகமிக முக்கியமான தேவைகளுக்கு மட்டுமே வெளியே வந்தால் போதுமானது என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் தொற்றால் கர்ப்பிணி பெண்களும் அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளது. தற்போது இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நேரத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஒருவேளை தொற்று ஏற்பட்டால் உடனடியாக மருத்தவ சிகிச்சை பெற சிரமம் ஏற்படலாம். அப்போது அவர்களும், அவர்களது வயிற்றில் வளரும் குழந்தையும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.



இதனால் அவசர உதவி வேண்டுமென்றால், வாட்ஸ்அப்பில் ‘9354954224’ என்ற நம்பரை உதவிக்கு நாடலாம் என தேசிய மகளிர் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News