செய்திகள்
கோப்புபடம்

உடுமலை அரசு விடுதி மாணவிகளுக்கு இலவச சிலம்ப பயிற்சி

Published On 2021-10-08 08:33 GMT   |   Update On 2021-10-08 08:33 GMT
மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தவும் விளையாட்டில் ஆர்வம் ஏற்படுத்தவும் மாற்று ஏற்பாடாக விளையாட்டு மற்றும் பல்வேறு பயிற்சியில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டது.
உடுமலை:

உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழுநேர நூலகம் எண்-2 நூலக வாசகர் வட்டம், பகத்சிங் சிலம்பம் களரி மார்ஷியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இலவச சிலம்பம், களரி பயிற்சிகளை அளித்து வருகிறது.

இதில் மாநில தேசிய அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளனர். மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தவும் விளையாட்டில் ஆர்வம் ஏற்படுத்தவும் மாற்று ஏற்பாடாக விளையாட்டு மற்றும் பல்வேறு பயிற்சியில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டது. 

இதையடுத்து உடுமலை பாபுகான் வீதியில் உள்ள அரசு மாணவிகள் விடுதியில் பாரதியார் நூற்றாண்டு மற்றும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு இலவச சிலம்ப பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழா நாளை மாலை 5 மணிக்கு விடுதி வளாகத்தில் நடக்கிறது. 
Tags:    

Similar News