செய்திகள்
மேட்டூர் அணை (கோப்புப்படம்)

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

Published On 2019-11-04 04:34 GMT   |   Update On 2019-11-04 04:34 GMT
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 9ஆயிரத்து 500 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை இது 10ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 9ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 9ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை இது 10ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்துள்ளது.

இதையடுத்து அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனம் மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு 11ஆயிரத்து 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 13 நாட்களாக 120 அடியாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இந்த ஆண்டு மேட்டூர் அணையை நம்பியுள்ள மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு வராது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மீன் வளமும் பெருகுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என மீனவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
Tags:    

Similar News