ஆன்மிகம்
கள்ளழகர் கோவில்

நேர்த்திக்கடன் செலுத்த முடியாமல் தவிப்பு: கள்ளழகர் கோவிலை திறக்க பக்தர்கள் கோரிக்கை

Published On 2021-06-19 09:10 GMT   |   Update On 2021-06-19 09:10 GMT
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். பல்வேறு நேர்த்திக்கடன்களையும் செலுத்த முடியாமல் பக்தர்கள் கவலையுடன் உள்ளனர்.
திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என்று அழைக்கப்படுவது மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். மேலும் இக்கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகும். கொரோனா ஊரடங்கு காரணமாக இக்கோவில் மூடப்பட்டு வெறிச்சோடிக் காணப்படுவதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

இக்கோவிலில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நெல் உள்ளிட்ட தானிய வகைகளை காணிக்கையாக செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இது தவிர பணம், முடி காணிக்கை, கிடாய் வெட்டுதல் போன்ற பல்வேறு நேர்த்திக்கடன்களையும் செலுத்த முடியாமல் பக்தர்கள் கவலையுடன் உள்ளனர்.

எனவே தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் கள்ளழகர் கோவில், 6-ம் படைவீடான சோலைமலை முருகன் கோவில், அழகர்மலை உச்சியில் உள்ள ராக்காயி அம்மன் கோவில் மற்றும் பதினெட்டாம்படி கருப்பணசாமி ஆகிய கோவில்களை திறந்து பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News