செய்திகள்
கோப்புபடம்

நாளை சூரியகிரகணம்

Published On 2021-06-09 08:13 GMT   |   Update On 2021-06-09 08:27 GMT
வளைய சூரிய கிரகணம் இந்திய நேரப்படி நாளை மதியம் 1:42 மணிக்கு தொடங்கி மாலை 6:41 மணி வரை நிகழ்கிறது. வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. சூரிய கண்ணாடி வாயிலாக மட்டுமே பார்க்க வேண்டும்.
உடுமலை

சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது சூரியனுக்கும்-பூமிக்கும் இடையில் நிலவு இருக்கும். அப்போது சூரிய ஒளியை நிலவு மறைப்பதால் அதன் நிழல் பூமியில் தெரியும். இது சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. 

அதன்படி நடப்பு ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை (10-ந்தேதி) வியாழக்கிழமை  நிகழ்கிறது. இதுகுறித்து உடுமலை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் கூறியதாவது:-

சூரியனின் ஒரு பகுதியை மட்டும் நிலவு மறைப்பது பகுதி சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. நிலவு, சூரியனை மத்தியில் மறைப்பதால் சூரியன் வளையம் போன்று தோன்றும். இது வளைய சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளை தவிர வேறு எங்கும் காண இயலாது. 

கனடாவின் சில பகுதிகள், கிரீன்லாந்து, ரஷ்யா போன்ற இடங்களில் இந்த வளைய சூரிய கிரகணம் தெரியும்.அதேநேரம், வடக்கு அலாஸ்கா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் பகுதி சூரிய கிரகணம் தெரியும். இந்த வளைய சூரிய கிரகணம் இந்திய நேரப்படி, நாளை மதியம் 1:42 மணிக்கு தொடங்கி மாலை 6:41 மணி வரை நிகழ்கிறது. வெறும் கண்களால் பார்க்கக்கூடாது.சூரிய கண்ணாடி வாயிலாக மட்டுமே பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News