செய்திகள்
அழகர் மலை உச்சியில் இருந்து மலை அடிவாரத்திற்கு கோட்டை சுவரை கடந்து பாய்ந்துவரும் சிற்றோடை

அழகர்மலை உச்சியில் இருந்து சிற்றாறு போன்று ஓடும் நூபுர கங்கை புனித தீர்த்தம்

Published On 2021-01-25 02:12 GMT   |   Update On 2021-01-25 02:12 GMT
அழகர்மலை உச்சியில் இருந்து நூபுர கங்கை புனித தீர்த்தம் சிற்றாறு போன்று ஓடுகிறது.
அழகர்கோவில்:

திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என்று போற்றி புகழ்ந்த பெருமை உடையது. மதுரையை அடுத்த அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். அழகர் மலை உச்சியில் பிரசித்தி பெற்ற நூபுரகங்கை புனித தீர்த்தம் வழிந்து கொண்டிருக்கிறது.

கடந்த 10 மாதங்களாக கொரோனா தொற்று காரணமாகவும் அரசின் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாலும், இந்த தீர்த்தத்தில் நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

இதனால் தானாக வழிந்துவரும் தீர்த்தம் சுமார் 4 கி.மீ. தூரம் பல்வேறு மூலிகை மரங்களை கடந்தும், அத்துடன் ஆங்காங்கே மலையின் தன் ஊற்று தண்ணீரும் சேர்ந்து அழகர்மலை அடிவாரத்திற்கு சிற்றாறாக வருகிறது. இது சப்த கன்னிமார் கோவில் முன்பு அதன் வழியாக வழிந்து செல்கிறது.

இந்த தீர்த்தம் மொத்தமாக அருகில் உள்ள ஆறாமுத்தன் கண்மாயில் போய் சேருகிறது. சமீபத்தில் பெய்த புயல் மழையின் காரணத்தினால் நூபுர கங்கை தீர்த்தம் அதிக அளவு வெளியேறி வந்து யாரும் நீராடாமல் போய் கொண்டிருக்கிறது.

கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பக்தர்கள் இதை ஆர்வமாக வந்து பார்த்து செல்கின்றனர். கடந்த 15 வருடங்களுக்கு பிறகு இந்த தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ளது. இதில் இன்னும் நூபுர கங்கையில் பக்தர்கள் நீராடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. எனவே தமிழக அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் பக்தர்கள் அரசு வழிகாட்டுதல்படி புனித நீராட அனுமதி வழங்க வேண்டும் என்று பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News