செய்திகள்
காங்கயம் போலீஸ் நிலையத்தில் கோவை சரக டி.ஐ.ஜி. எம்.எஸ்.முத்துசாமி ஆய்வு செய்த காட்சி.

இரவு ரோந்து சென்று குற்றங்களை தடுக்க வேண்டும் - போலீசாருக்கு டி.ஐ.ஜி., உத்தரவு

Published On 2021-11-20 07:14 GMT   |   Update On 2021-11-20 07:14 GMT
புகார் மனுதாரர்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு டி.ஐ.ஜி., அறிவுரைகள் வழங்கினார்.
காங்கயம்:

காங்கயம் போலீஸ் நிலையத்தில் கோவை சரக டி.ஐ.ஜி. எம்.எஸ்.முத்துசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  

அங்கு பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்கள், பதிவேடுகள் மற்றும் குற்ற வழக்கு கோப்புகளை ஆய்வு செய்து, இதுவரையில் கண்டுபிடிக்காத வழக்குகளை கண்டுபிடிக்குமாறும், நிலுவையில் உள்ள நீண்ட கால வழக்குகளை விரைவில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், இரவு ரோந்துகளை முறையாக செய்து குற்றங்களை தடுக்குமாறும் உத்தரவிட்டார்.

மேலும் புகார் மனு மீதான விசாரணை முறையாக நடக்க வேண்டும், புகார் மனுதாரர்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார்.

தொடர்ந்து ஊதியூர்காவல் நிலையத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது காங்கயம் டி.எஸ்.பி. குமரேசன், இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News