ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

திருப்பரங்குன்றம் கோவிலில் சுந்தரருக்கு குருபூஜை

Published On 2020-07-29 07:31 GMT   |   Update On 2020-07-29 07:31 GMT
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சுவாதி நட்சத்திரத்தில் சுந்தரருக்கு குருபூஜை நடைபெற்றது. விழாவையொட்டி கோவிலுக்குள் சண்முகர் சன்னதியில் அமைந்துள்ள சுந்தரருக்கு அபிஷேகம் நடந்தது.
சைவ சமய குறவர்களான நால்வர்களின் ஒருவரும், 63 நாயன்மார்களின் ஒருவருமானவர் சுந்தரர். இவருக்கு ஆண்டுதோறும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சுவாதி நட்சத்திரத்தில் குரு பூஜைவிழா நடைபெறும். அதன்படி நேற்று சுவாதி நட்சத்திரத்தில் சுந்தரருக்கு குருபூஜை நடைபெற்றது.

விழாவையொட்டி கோவிலுக்குள் சண்முகர் சன்னதியில் அமைந்துள்ள சுந்தரருக்கு அபிஷேகம் நடந்தது. இதேபோல உற்சவர் சன்னதியில் சுந்தரருக்கு பால், பன்னீர், தயிர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. இதனையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சுந்தரர் பல்லக்கில் எழுந்தருளி, கோவிலுக்குள் உள்ள கம்பத்தடி மண்டபத்தை சுற்றி வந்தார்.

அப்போது தேவார பாடல் பாடப்பட்டது. குருபூஜையில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் கோவில் பட்டர்கள் மற்றும் ஊழியர்கள் சிலர் மட்டும் பங்கேற்றனர்.
Tags:    

Similar News