ஆட்டோ டிப்ஸ்
சுங்கச் சாவடி

இந்தியாவில் பாஸ்டேக் வருமானம் இத்தனை கோடிகளா?

Published On 2022-01-03 08:18 GMT   |   Update On 2022-01-03 08:18 GMT
இந்தியாவில் கடந்த மாதம் பாஸ்டேக் மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளன.


நாடு முழுக்க செயல்பட்டு வரும் சுவங்கச் சாவடிகளில் வாகன நெரிசலை குறைக்கும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் ‘பாஸ்டேக்’ மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

கடந்த மாதத்தில் ‘பாஸ் டேக்’ மூலம் நாடு முழுவதும் ரூ. 3,679 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாள் ஒன்றுக்கு பாஸ்டேக் மூலம் ரூ. 119 கோடி வசூலிக்கப்பட்டு இருக்கிறது. இது தினசரி வசூலில் புது சாதனை ஆகும்.



கடந்த நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது டிசம்பர் 2021, மாதத்தில் சுங்க கட்டணம் ரூ. 502 கோடி அதிகரித்து இருக்கிறது. 2020 டிசம்பரில் ரூ. 2,304 கோடியாக இருந்த கட்டண வசூல் கடந்த மாதத்தில் 1,375 கோடி அதிகரித்துள்ளது.

பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெற்றதால் சுங்க கட்டண வசூல் அதிகரித்துள்ளது. மேலும் பொருளாதார நடவடிக்கை காரணங்களாலும் கட்டண வசூல் அதிகரித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News