செய்திகள்
பணம்

மதுரையில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.12.50 லட்சம் மோசடி

Published On 2021-10-29 10:22 GMT   |   Update On 2021-10-29 10:22 GMT
மதுரையில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.12.50 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை அன்பு நகர் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன். இவர் அண்ணாநகர் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றைக் கொடுத்து உள்ளார்.

அந்த புகார் மனுவில், வேலூர் காட்பாடி பாரதி நகரைச் சேர்ந்த சந்திரன் மற்றும் அவரது மகன்கள் பிரேம்குமார் (வயது 41), பிரதீப் (38), மற்றும் ஜெயந்தி ராஜகோபால் ஆகிய 4 பேரும் என்னிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.12.50 லட்சம் கேட்டனர்.

நான் அவர்களை நம்பி பணத்தைக் கொடுத்தேன். ஆனால் அவர்கள் வேலை வாங்கி தரவில்லை. எனவே நான் அவர்களிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். அப்போது அவர்கள் பணத்தை திருப்பித் தர மறுத்து விட்டனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இதன் அடிப்படையில் அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை பைபாஸ் ரோட்டில் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. அந்த நிறுவனத்தின் கிளை மேலாளர் தியாக ராஜன் எஸ்.எஸ். காலனி போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்து உள்ளார்.

அதில், எங்கள் நிறுவனத் தில் வேலை பார்த்த மணிரத்தினம் (29), வீரமணி (25) ஆகிய 2 பேரும் கம்பெனியின் பெயரை பயன்படுத்தி ரூ.9 லட்சத்து 33 ஆயிரத்து 70 ரூபாய் மோசடி செய்து உள்ளனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார்.

இதன் அடிப்படையில் எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News