உள்ளூர் செய்திகள்
மருதுபாண்டியர் நினைவு மண்டபத்தை செய்தி-மக்கள் தொடர்பு துறை இயக்குநர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மணிமண்டபங்கள், நினைவு மண்டபங்கள் ஆய்வு

Published On 2022-04-17 09:50 GMT   |   Update On 2022-04-17 09:50 GMT
சிவகங்கை மாவட்டத்தில் மணிமண்டபங்கள், நினைவு மண்டபங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
சிவகங்கை

சிவகங்கை மாவட்டம், சூரக்குளத்தில் அமைந்துள்ள வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம்,  வீரத்தாய் குயிலி நினைவு சின்னம், திருப்பத்தூரில் அமைந்துள்ள மருதுபாண்டியர்கள் நினைவு மண்டபம், குன்றக்குடியில் அமைந்துள்ள தவத்திரு குன்றக்குடி அடிகளார் மணிமண்டபம், காரைக்குடியில் அமைந்துள்ள கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம்  ஆகியவைகளை செய்தி மக்கள் தொடர்பு துறையின் இயக்குநர் ஜெயசீலன்   பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, மணி மண்டபங்கள்,  நினைவு மண்டபங்களில் கூடுதலாக புகைப்படங்கள், சிறப்பு மிக்க வரலாற்று விவரங்களை நிறுவிடவும், மண்டபத்தினுள் திருவுருவ சிலைகள் மற்றும் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவிக்க பயன்படுத்தப்படும் படிக்கட்டுகள் ஆகியவற்றின் உறுதித்தன்மை, மணி மண்டபங்கள் மற்றும் நினைவு மண்டபங்களின்  வளாகத்தில் கூடுதலாக ஏற்படுத்த வேண்டிய கட்டிடங்கள், பூங்காக்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் பல்வேறு வகையான அழகுச்செடிகள் அமைத்து பராமரித்திடவும், மண்ட பத்தினுள் உள்ள நூலகங் களில், பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் உள்ள புத்தகங்கள், குறிப்பாக போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் ஆகியவைகளை கூடுதலாக நிறுவிடவும், பார்வையாளர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாகவும், மணி மண்டபங்களுக்கு வருகைபுரியும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்துகொண்டு, வரலாற்று சிறப்புக்களை அவர்களுக்கு எடுத்துரைக்கவும், பொதுமக்களின் வருகைப்பதிவேடுகளை முறையாக பராமரிக்கவும் இயக்குநர் ஜெயசீலன் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
Tags:    

Similar News