செய்திகள்
புரெவி புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை சென்னை வேளாண்மை இயக்குனர் பார்வையிட்டார்

திருவையாறு பகுதி புரெவி புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண் இயக்குனர் ஆய்வு

Published On 2020-12-17 06:44 GMT   |   Update On 2020-12-17 06:44 GMT
திருவையாறு பகுதியில் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண் இயக்குனர் ஆய்வு செய்தார்.
திருவையாறு:

திருவையாறு அருகே உள்ள விளாங்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி நெற் பயிர்களை சென்னை வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, இணை இயக்குனர் ஜெஸ்டின், துணை இயக்குனர்கள் ஈஸ்வர், கோமதிதங்கம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது உதவி இயக்குனர்கள் குமரன், சுதா, திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், வருவாய் ஆய்வாளர் சாந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

இதுகுறித்து வேளாண்மை அதிகாரிகள் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. 33 சதவீதத்துக்கு மேல் மகசூல் இழப்பு ஏற்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்’ என்றனர்.
Tags:    

Similar News