செய்திகள்
கொரோனா தடுப்பூசி

தடுப்பூசி செலுத்துவதில் 13 மாவட்டங்களில் திருப்தி இல்லை

Published On 2021-09-28 07:52 GMT   |   Update On 2021-09-28 09:44 GMT
தலைமை செயலாளர் இறையன்பு மாவட்ட கலெக்டர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘எந்தெந்த மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி சிறப்பாக நடைபெற்றதோ அந்த மாவட்ட கலெக்டர்களை பாராட்டி உள்ளார்.

சென்னை:

தமிழ்நாட்டில் கொரோனா நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் 3 கட்டங்களாக நடத்தப்பட்டன. 4-வது கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடத்த அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

இந்த நிலையில் தலைமை செயலாளர் இறையன்பு மாவட்ட கலெக்டர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘எந்தெந்த மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி சிறப்பாக நடைபெற்றதோ அந்த மாவட்ட கலெக்டர்களை பாராட்டி உள்ளார்.

இதில் எந்த மாவட்டங்களில் பணிகள் திருப்தியாக இல்லையோ அந்த மாவட்டங்களை சுட்டிக்காட்டி உங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

 


தடுப்பூசி கிடைப்பதில் ஏதாவது குறைபாடுகள் அல்லது பிற சிக்கல்கள் ஏதும் இருந்தால் சுகாதாரத் துறை செயலாளரை தொடர்பு கொள்ளலாம் என்றும் நீங்கள் எதிர்கொள்ளும் எந்த சிரமங்களையும் என் கவனத்துக்கு கொண்டு வரலாம்’ என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணி மிகச்சிறப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கடலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, அறந்தாங்கி, அரியலூர், வேலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட 13 சுகாதார மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணி திருப்தியாக இல்லை என்றும் சுட்டிக்காட்டி உள்ளார்.

பின்தங்கிய மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியை இருமடங்காக்க வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தி உள்ளார்.

இதையும் படியுங்கள்... சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு ஆயுத பூஜையை முன்னிட்டு கூடுதல் சிறப்பு பஸ்கள்

Tags:    

Similar News