செய்திகள்
தங்க நகைகள்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்தது

Published On 2021-01-27 07:32 GMT   |   Update On 2021-01-27 07:32 GMT
தங்கம் விலையில் பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.36 ஆயிரத்து 968க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:

தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்றத்தாழ்வு காணப்பட்டு வருகிறது. கடந்த 19-ந் தேதி பவுன் மீண்டும் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது. அதன் பின் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வந்தது. நேற்று தங்கம் பவுன் ரூ.37 ஆயிரத்து 88-க்கு விற்றது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.36 ஆயிரத்து 968க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.4 ஆயிரத்து 621 ஆக உள்ளது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.70 ஆயிரத்து 800 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.70.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.



Tags:    

Similar News