ஆன்மிகம்
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் கொடிமரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்ட போது எடுத்த படம்.

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

Published On 2021-04-19 05:02 GMT   |   Update On 2021-04-19 05:02 GMT
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு  கோவிலில் உள்ளே நடராஜர் சன்னதியில் யானை பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு பிறகு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

கொரோனா நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் தினமும் சுவாமி அம்பாள் வீதி உலா வரும் நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், சுவாமி-அம்பாள் வீதி உலாவானது கோவில் உள்பிரகாரத்தில் நடைபெறும் என்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News