செய்திகள்
பாஜக வேட்பாளர் ஜான்குமார்

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜான்குமார் வெற்றி

Published On 2021-05-02 09:31 GMT   |   Update On 2021-05-02 09:31 GMT
காமராஜ் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜான்குமார் 16303 வாக்குகளும், 384 தபால் வாக்குகளும் பெற்றுள்ளார்.
புதுச்சேரி:

புதுவை சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க. ஒரு அணியாகவும், காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு ஒரு அணியாகவும் போட்டியிட்டது.

இதுதவிர அ.ம.மு.க., மக்கள்நீதிமய்யம், நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க. சுயேச்சைகள் என 30 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 324 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் என்ஆர்.காங்கிரஸ் 16, பா.ஜனதா 9, அ.தி.மு.க. 5 தொகுதிகளில் போட்டியிட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் 15, தி.மு.க. 13, இந்தியகம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் தலா ஒரு தொகுதியில் போட்டியிட்டது.

இதில் ஏனாம் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவில்லை. இதனால் 14 தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் போட்டியிட்டது. தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடந்தது.

தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் புதுவையில் தாகூர் கலைக்கல்லூரி, மகளிர் பாலிடெக்னிக், மோதிலால் நேரு ஆண்கள் பாலிடெக்னிக் ஆகிய இடங்களிலும், காரைக்காலில் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியிலும், மாகி, ஏனாமில் மண்டல நிர்வாக அலுவலகங்களிலும் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் காமராஜ் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜான்குமார் 16303 வாக்குகளும், 384 தபால் வாக்குகளும் பெற்றுள்ளார்.

எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஷாஜகான் 9208 வாக்குகளும், 250 தபால் வாக்குகளும் பெற்றுள்ளார்.

காங்கிரஸ் வேட்பாளர் ஷாஜகானை விட 7229 வாக்குகள் கூடுதலாக பெற்று பாஜக வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றுள்ளார்.
Tags:    

Similar News