ஆட்டோமொபைல்
போலாரிட்டி எலெக்ட்ரிக் பைக்

போலாரிட்டி ஸ்மார்ட் எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-09-21 09:24 GMT   |   Update On 2019-09-21 09:24 GMT
பொலாரிட்டி நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் பைக் மாடலை அறிமுகம் செய்துள்ளது.



பொலிரிட்டி நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது. புனேவை சேர்ந்த பொலாரிட்டி நிறுவனம் இந்தியாவில் மொத்தம் ஆறு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்திருக்கிறது. இவை ஸ்போர்ட்ஸ் மற்றும் எக்சிகியூட்டிவ் என இருவித பிரிவுகளில் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்போர்ட்ஸ் பிரிவில் எஸ்1கே, எஸ்2கே மற்றும் எஸ்3கே மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலை முறையே ரூ. 38,000 இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 1.05 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எக்சிகியூட்டிவ் பிரிவில் இ1கே, இ2கே மற்றும் இ3கே மாடல்கள் முறையே ரூ. 40,000 இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 1.10 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



அனைத்து எலெக்ட்ரிக் வாகனங்களிலும் 1 - 3கிலோவாட் திறன் கொண்ட BLDC மோட்டார் மற்றும் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்படலாம். இத்துடன் பேட்டரிகளுக்கு மூன்று வருட வாரண்டியும் வழங்கப்படுகிறது. அனைத்து மாடல்களும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 80 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

இவை குறைந்த பட்சம் மணிக்கு 40 கிலோமீட்டரில் துவங்கி டாப் எண்ட் மாடல் அதிகபட்சம் மணிக்கு 100 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இவற்றை சார்ஜிங் செய்ய 40 வோல்ட் 5ஏ யூனிட் கொண்ட ஹோம் சார்ஜிங் சாதனம் வழங்கப்படுகிறது. இத்துடன் 80 வோல்ட் 10ஏ ஃபாஸ்ட் சார்ஜர் விரும்புவோர் தேர்வு செய்து கொள்ளும் வகையில் வழங்கப்படுகிறது. 

பொலிரிட்டியின் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. இவற்றின் விநியோகம் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News