ஆட்டோமொபைல்
மஹிந்திரா டி.யு.வி.300

வெளியீட்டிற்கு முன் சோதனையில் சிக்கிய பி.எஸ். 6 டி.யு.வி.300

Published On 2019-08-06 11:00 GMT   |   Update On 2019-08-06 11:00 GMT
மஹிந்திரா நிறுவனத்தின் டி.யு.வி.300 பி.எஸ். 6 வேரியண்ட் வெளியீட்டிற்கு முன் சோதனை செய்யப்பட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.



மஹந்திரா நிறுவனத்தின் டி.யு.வி.300 மாடல் இந்தியாவில் அப்டேட் செய்யப்பட இருக்கிறது. அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடல் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இந்நிலையில், இந்த கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், காட்சியளிக்கும் டி.யு.வி.300 வெள்ளை நிற ரூஃப் மற்றும் ORVMகளை கொண்டிருக்கிறது. புதிய மஹிந்திரா டி.யு.வி.300 பி.எஸ். 6 புகை விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்படுகிறது. எனினும், புதிய காரில் எம்ஹாக்100 டீசல் என்ஜின் வழங்கப்படும்.

இது 1.5 லிட்டர் யூனிட் ஆகும். இந்த என்ஜின் 100 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. டி.யு.வி.300 மாடல் கடந்த மாதம் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டது.



இதில் முன்புற கிரில் பியானோ பிளாக் நிறத்திலும், க்ரோம் இன்செர்ட், மெல்லிய ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், 10-ஸ்போக் அலாய் வீல் உள்ளிட்டவை வழஹ்கப்பட்டிருக்கின்றன. இவை காருக்கு ரக்கட் தோற்றத்தை வழங்குகிறது. 

காரின் உள்புறம் டூயல் டோன் டேஷ்போர்டு, லெதர் இருக்கைகள், டிரைவர் சீட் மற்றும் லம்பர் அட்ஜஸ்ட் செய்யும் வசதி, எலெக்ட்ரிக்கல் அடஜஸ்ட் வசதி கொண்ட ORVMகள், ரிமோட் லாக், கீலெஸ் என்ட்ரி, ஃபாலோ-மி-ஹோம் ஹெட்லேம்ப்கள், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட ஆடியோ மற்றும் கால் கண்ட்ரோல்கள், 7-இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

புகைப்படம் நன்றி: Drivespark
Tags:    

Similar News