ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சகஸ்ர கலசாபிஷேக பரிகார பூஜை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சகஸ்ர கலசாபிஷேக பரிகார பூஜை

Published On 2020-08-11 05:09 GMT   |   Update On 2020-08-11 05:09 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஊரடங்கு உத்தரவினால் திருவிழாக்கள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதற்கான பரிகார ஹோமமான சகஸ்ர கலசாபிஷேக பூஜை நடத்தப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த மார்ச் 25-ந் தேதியில் இருந்து நடை சாத்தப்பட்டு உள்ளது.

கோவிலில் நித்தியபடி கால பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டு வருகின்றன. பக்தர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. ஊரடங்கு உத்தரவினால் பங்குனி தேர் திருவிழா, சித்திரை தேர் திருவிழா, பெருமாள், தாயார் கோடை திருநாட்கள் மற்றும் பெருமாள், தாயார் வசந்தம் திருநாள் விழாக்கள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதற்கான பரிகார ஹோமமான சகஸ்ர கலசாபிஷேக (1008 கலசாபிஷேகம்) பூஜை நேற்று நடத்தப்பட்டது.

அர்ஜுன மண்டபத்தில் நடந்த இந்த பூஜையில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. கோவில் இணைஆணையர் ஜெயராமன் இந்த தகவலை தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News