ஆன்மிகம்
பெண்கள் கடவுளை நமஸ்கரிக்கும் போது இதை செய்யக்கூடாது

பெண்கள் கடவுளை நமஸ்கரிக்கும் போது இதை செய்யக்கூடாது

Published On 2020-10-10 09:02 GMT   |   Update On 2020-10-10 09:02 GMT
பொதுவாக கடவுளை வணங்கும் பொழுது சில விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பூமியில் விழுந்து கடவுளையோ பெரியவர்களையோ பெண்கள் வணங்க வேண்டும். அடிக்கடி இவ்வாறு வணங்குவதால், ஆயுளும் அழகும் கூடும். பொதுவாக கடவுளை வணங்கும் பொழுது பெண்களின் கூந்தல் தரையில் விழக்கூடாது. காலின் மேலும் விழக்கூடாது இதனால் தெய்வ அருளும், பெரியவர்களின் ஆசியும் பூரணமாக கிடைக்காதபடி தேவதைகள் தடுக்கும்.

பூமித் தாயின் அருள் கிடைக்கப் பெண்கள் விழுந்து வணங்கும் போது கொண்டை போட்டுக் கொண்டோ அள்ளி முடிந்து கொண்டோ விழுந்து வணங்க வேண்டும். இதனால் நீண்டநாள் ஆரோக்கியமாக வாழலாம் என கூறுகிறது தர்ம சாஸ்திரம்.

பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்வர். பஞ்சாங்க என்பது தலை, கையிரண்டு முழந்தாளிரண்டு என்னும் ஐந்தும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குவதாம். இதை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை என ஒற்றைப்படையில் செய்வர் இது சிறந்த பெண்களுக்கான உடல் பயிற்சியாகும். இவ்வாறு வழிபாட்டு முறைகளில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் முறைகளை வைத்துள்ளனர் முன்னோர்கள்.
Tags:    

Similar News