தொழில்நுட்பம்
சர்ஃபேஸ் டுயோ

இரட்டை ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட மைக்ரோசாஃப்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2019-10-03 04:34 GMT   |   Update On 2019-10-03 04:34 GMT
மைக்ரோசாப்ஃப்ட் நிறுவனத்தின் சர்ஃபேஸ் டுயோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இரட்டை ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.



இரட்டை ஸ்கிரீன் கொண்ட புதிய மைக்ரோசாஃப்ட் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் டுயோ என அழைக்கப்படும் புதிய சாதனம் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

புதிய மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் டுயோவில் இரண்டு 5.6 இன்ச் ஸ்கிரீன்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை திறக்கும் போது 8.3 இன்ச் ஸ்கிரீன் டேப்லெட் போன்று பயன்படுத்தலாம். இதில் வழங்கப்பட்டுள்ள தாழ் 360 கோணத்தில் மடங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் சாதனத்தை பல்வேறு வகைகளில் பயன்படுத்த முடியும்.



சர்ஃபேஸ் டுயோவில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் மைக்ரோசாஃப்ட் லான்ச்சர் வழங்கப்பட்டுள்ளன. புதிய சாதனத்திற்கென மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ள டீசர் வீடியோவில் டூயல் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவில் ப்ராஜக்ட் எக்ஸ்-கிளவுட் எக்ஸ்பாக்ஸ் கேம் ஸ்டிரீமிங் வழங்கப்படுகிறது.

ஸ்மார்ட்போனினை வெளிப்புறம் திறக்கும் போது சர்ஃபேஸ் டுயோவில் ப்ராஜக்ட் எக்ஸ்-கிளவுட் சேவைக்கான டச் கமாண்ட்கள் வேலை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய சர்ஃபேஸ் டுயோ விற்பனை அடுத்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாத வாக்கில் துவங்கும் என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News