செய்திகள்
சூறாவளியால் சாலையில் சாய்ந்த மின்கம்பங்கள்

பிலிப்பைன்சை கடுமையாக தாக்கிய கோனி சூறாவளி -16 பேர் உயிரிழப்பு

Published On 2020-11-02 10:22 GMT   |   Update On 2020-11-02 10:22 GMT
பிலிப்பைன்சை கோனி சூறாவளி புயல் தாக்கியதில் சுமார் 13 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், 16 பேர் உயிரிழந்தனர்.
மணிலா:

பிலிப்பைன்சில் நேற்று அதிகாலையில் கோனி சூறாவளிப் புயல் தாக்கியது. கேட்டண்டுவானஸ் மாகாணத்தை தாக்கிய இந்த சூறாவளிப் புயல் காரணமாக, கேட்டண்டுவானஸ் மற்றும் அருகில் உள்ள அல்பே மாகாணத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. மின்கம்பங்கள் சாய்ந்தன, வீட்டுக் கூரைகள் காற்றில் பறந்தன. புயல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. 

சூறாவளி புயல் மற்றும் கனமழையால் சுமார் 13 ஆயிரம் குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன. 16 பேர் உயிரிழந்தனர். 3 பேரைக் காணவில்லை. பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

இந்த ஆண்டில், இதுவரை வந்த சூறாவளிப் புயலில் சக்தி வாய்ந்தது கோனி புயல் என கூறப்படுகிறது. புயல் கரைகடந்தபோது மணிக்கு 225 கிமீ வேகத்தில் பெருங்காற்று வீசியது. கரை கடந்தபின்னர் வலுவிழக்கத் தொடங்கிய கோனி புயல், மணிலா நோக்கி திரும்பியது. அதன்பின்னர் தென் சீனக் கடலுக்கு சென்றது.
Tags:    

Similar News