செய்திகள்
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை 9ந் தேதி வெளியீடு

Published On 2021-08-04 08:57 GMT   |   Update On 2021-08-04 10:33 GMT
வருவாய் இழப்பிற்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வெள்ளை அறிக்கையில் இடம்பெறும்.
சென்னை:

தமிழக அரசின் நிதிநிலை குறித்த 120 பக்க வெள்ளை அறிக்கையை வரும் 9ந்தேதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுகிறார்.

கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சி செய்த நிலையில் தி.மு.க. அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுகிறது.



வருவாய் இழப்பிற்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வெள்ளை அறிக்கையில் இடம்பெறும். 120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையில் கடன் விவரங்கள், குடிநீர், மின்வாரியம், போக்குவரத்து துறையின் வரவு-செலவு, வருவாய் இழப்புக்கான காரணம் உள்ளிட்டவை வெளியாகும்.


Tags:    

Similar News