செய்திகள்
கோப்புபடம்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - கலெக்டரிடம் பூசாரிகள் நலச்சங்கம் மனு

Published On 2021-09-24 05:52 GMT   |   Update On 2021-09-24 05:52 GMT
அனைத்து வகை பூசாரிகளையும் நலவாரிய உறுப்பினராக சேர்க்க சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
திருப்பூர்:

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திருப்பூர் மாவட்ட பூசாரிகள் சமூக நல சங்கத்தினர் வலியுறுத்திஉள்ளனர். 

இதுகுறித்து அவர்கள கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் கொரோனா நிவாரண உதவி பெரும்பாலான பூசாரிகளுக்கு கிடைக்கவில்லை. அறநிலையத்துறை கோவில் பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு மட்டும் உதவி கிடைக்கிறது.

இதர கோவில் பூசாரிகளுக்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. தமிழக அரசு வேறுபாடு பார்க்காமல் கொரோனா நிவாரணம் வழங்கியிருக்க வேண்டும். நலவாரியத்தில் உறுப்பினராக சேரவும், உதவிகள் கேட்டு விண்ணப்பித்தும் எவ்வித பயனும் இல்லை.

அனைத்து வகை பூசாரிகளையும் நலவாரிய உறுப்பினராக சேர்க்க சிறப்பு முகாம் நடத்த வேண்டும். வாரிய உறுப்பினர்களுக்கு பாரபட்சமின்றி, அனைத்துவித நல உதவிகளையும் வழங்க வேண்டும்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என அரசு கூறியுள்ளதை ஒரு போதும் ஏற்க முடியாது. ஆலயம் என்பது புனிதமான இடம். அங்கு ஆகம விதிகளை சரிவர பின்பற்றி பூஜை செய்ய வேண்டும். 

யார் வேண்டுமானாலும், அர்ச்சகர் ஆகலாம் என்பதை ஏற்க முடியாது. தமிழக அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News