கிச்சன் கில்லாடிகள்
காலிஃப்ளவர் ஸ்டஃப்டு பூரி

சூப்பரான காலிஃப்ளவர் ஸ்டஃப்டு பூரி

Published On 2022-02-25 09:22 GMT   |   Update On 2022-02-25 09:22 GMT
குழந்தைகளுக்கு பூரி என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று காலிஃப்ளவர் ஸ்டஃப்டு பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ரெசிபி செய்வதும் மிகவும் சுலபம்.
தேவையான பொருட்கள் :

காலிஃப்ளவர் (சிறியது) - ஒன்று,
கோதுமை மாவு - 200 கிராம்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

காலிஃப்ளவரை சிறிய பூக்களாக நறுக்கவும். சூடான நீரில் காலிஃப்ளவரை போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வைக்கவும். பிறகு, தண்ணீரை வடியவிட்டு காலிஃப்ளவர் பூக்களைத் தனியே எடுத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, தேவையான அளவு தண்ணீர்விட்டு பூரி மாவு போல பிசையவும்.

காலிஃப்ளவருடன் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து மசிக்கவும்.

கோதுமை மாவை சிறிய உருண்டைகளாக்கி பூரிகளாக திரட்டி நடுவே காலிஃப்ளவர் கலவையை வைத்து மடித்து மீண்டும் திரட்டவும்.

வாணலியில் எண்ணெயைக் காயவைத்து திரட்டிய பூரிகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

சூப்பரான காலிஃப்ளவர் ஸ்டஃப்டு பூரி ரெடி.

குறிப்பு: இது சாதாரண பூரி போல உப்பி வராது. தட்டையாகவே இருந்தாலும், ருசி நன்றாக இருக்கும்.
Tags:    

Similar News