வழிபாடு
சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்

சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்

Published On 2022-01-10 07:03 GMT   |   Update On 2022-01-10 07:03 GMT
சோலை முருகன் கோவில் மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது.பின்னர் உற்சவர் வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கும் பூஜைகள், சுவாமி புறப்பாடு தீபாராதனை நடந்தது.
மதுரை மாவட்டம் அழகர் மலை உச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு சோலை முருகன் கோவில். இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழாவும் ஒன்றாகும். விழாவில் நேற்று காலையில் மேளதாளம் முழங்க அலங்கரிக்கப்பட்ட தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

தொடர்ந்து மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது.பின்னர் உற்சவர் வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கும் பூஜைகள், சுவாமி புறப்பாடு தீபாராதனை நடந்தது.

இந்த விழா ஒவ்வொரு நாளும் கோவில் வெளி பிரகாரத்தில் நடைபெறும், வருகிற 18-ந் தேதி இந்த திருவிழா நிறைவு பெறுகிறது. முன்னதாக நேற்று நடந்த விழாவின் போது கொரோனா தொற்று ஊரடங்கு காரணத்தினால் அனுமதிக் கப்பட்ட கோவில் சிவாச்சார்யார்களும், திருக்கோவில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்க டாசலம், துணை ஆணையர் அனிதா மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News