செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

படம் ஓட வேண்டும் என்பதற்காக விஜய் எங்களை தாக்குகிறார்- அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2019-09-23 05:10 GMT   |   Update On 2019-09-23 05:10 GMT
படம் ஓட வேண்டும் என்பதற்காக நடிகர் விஜய் அதிமுகவை தாக்கி பேசுவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், அதிமுக அரசை மறைவாக விமர்சனம் செய்தார். ‘பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி ஓட்டுனர் மீதும், பேனர் அச்சடித்தவர் மீதும் பழி போடுகிறார்கள். யார் மீது பழி போட வேண்டுமோ அதை செய்யாமல் உள்ளனர்’ என்றார் விஜய்.

அதேபோல், யாரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ அவரை அங்கே உட்கார வைத்தால் எல்லாம் சரியாக இருக்கும் என விஜய் பேசினார். இது, எடப்பாடி பழனிச்சாமியின் அரசை மறைமுகமாக விமர்சிதுள்ளார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது ஆளுங்கட்சியை சாடும் வகையில் விஜய் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பதில் வருமாறு:-

அதிமுகவை தொட்டால்தான் ஆளாக முடியும் என தொடுகிறார்கள். ஆனால் அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள் என்பது தான் வரலாறு. படம் ஓட வேண்டும் என்பதற்காக எங்கள் மீது இதுபோன்ற விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. பழுத்த மரம் தான் கல்லடி படும், அதிமுக பழுத்த மரம்.

விஜய்யோ, கவுண்டமணியோ செந்திலோ யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் மக்களுக்கு என்ன செய்ய போகிறார்கள் என்பதைதான் சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.ஜி.எஸ்.டி மூலம் தமிழகத்திற்கு ரூ. 4500 கோடி வரவேண்டி உள்ளது என்றும், 8.17% அளவுக்கு தமிழகம் பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.
Tags:    

Similar News