தொழில்நுட்பம்
கூகுள் பே

கூகுள் பே சேவையில் புது வசதி அறிமுகம்

Published On 2021-05-12 10:02 GMT   |   Update On 2021-05-12 10:02 GMT
கூகுள் நிறுவனத்தின் பேமண்ட் செயலியில் பண பரிமாற்றத்தை செயல்படுத்துவதில் புது வசதி வழங்கப்படுகிறது.

கூகுள் பே சேவையில் பண பரிமாற்றம் முதன்மையான ஒன்றாக இருந்து வருகிறது. பேமண்ட் செயலிகள் பிரிவில் இந்தியாவின் முன்னணி தளமாக கூகுள் பே இருக்கிறது. தற்போது இந்த செயலியில் சர்வதேச பண பரிமாற்ற வசதி வழங்கப்படுகிறது.

முதற்கட்டமாக பண பரிமாற்ற வசதி அமெரிக்காவில் இருந்து இந்தியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு பண பரிமாற்றம் செய்ய முடியும். கூகுள் பே செயலியில் சர்வதேச பண பரிமாற்ற வசதி மிக எளிமையான வழிமுறையாக வழங்கப்பட்டு இருக்கிறது.



கூகுள் பே செயலியில் உள்ள Pay ஆப்ஷனில் Western Union அல்லது Wise போன்ற ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். பின் அடுத்தடுத்த வழிமுறைகளை பின்பற்றி எளிமையாக பணம் அனுப்பலாம். அறிமுக சலுகையாக Western Union சேவையில் அன்லிமிடெட் பரிமாற்றங்கள் வழங்கப்படுகிறது. Wise சேவையில் முதல் பரிமாற்றம் இலவசமாக வழங்கப்படுகிறது.

சர்வதேச பண பரிமாற்ற சேவை அமெரிக்க பயனர்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்படுகிறது. இவர்கள் அமெரிக்காவில் இருந்தபடி இந்தியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள பயனர்களுக்கு பணம் அனுப்பலாம். இந்த ஆண்டு இறுதிக்குள் உலகின் 200 நாடுகளுக்கு இந்த சேவை நீட்டிக்கப்பட இருக்கிறது. 
Tags:    

Similar News