செய்திகள்
திருவாரூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற சாந்தா.

மாவட்ட நிர்வாகம் முழு முனைப்புடன் செயல்படும்- புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் சாந்தா பேட்டி

Published On 2020-10-29 09:35 GMT   |   Update On 2020-10-29 09:35 GMT
அரசின் திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் மாவட்ட நிர்வாகம் முழு முனைப்புடன் செயல்படும் என புதிதாக பொறுப்பேற்ற திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா கூறினார்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட கலெக்டராக இருந்த ஆனந்த் பணி மாறுதல் செய்யப்பட்டார். இதனையடுத்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்து வந்த சாந்தா திருவாரூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புதிய மாவட்ட கலெக்டராக பொறுப்பு ஏற்று கொண்டார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழக அரசு அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைகின்ற வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசின் திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் மாவட்ட நிர்வாகம் முழு முனைப்புடன் செயல்படும். சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும். பெண்கள் முன்னேற்றத்திற்காக சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் தான் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதில் நெல் உற்பத்தி என்பது தான் அதிகம். பாசன வசதி, தட்டுபாடின்றி உரங்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீர் நிலைகளில் கழிவு நீர் கலப்பதால் தண்ணீர் மாசு அடைவதால் உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் உடனே அகற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News