செய்திகள்
கோப்புபடம்

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை - 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Published On 2021-04-11 08:35 GMT   |   Update On 2021-04-11 08:35 GMT
காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்ட நிலையில் அதே பகுதியில் மேலும் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. எனவே அவர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த மாவட்டத்தில் பதுங்கி இருந்த பல பயங்கரவாதிகள் ஏற்கனவே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒரு பயங்கரவாதி பாதுகாப்பு படையினருடன் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டான். அதேபகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது தெரியவந்தது.எனவே தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஹாடிபோரா என்ற இடத்தில் அவர்கள் பதுங்கி இருப்பது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது போலீசார் மீது பயங்கரவாதிகள் சுட்டார்கள்.

இதைதொடர்ந்து பாதுகாப்பு படையினர் எதிர்தாக்குதல் நடத்தினார்கள். இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேலும் சில பயங்கரவாதிகள் சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே பிஜ்பெகாரா என்ற இடத்தில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. அந்த இடத்தையும் இன்று காலை பாதுகாப்புபடையினர் சுற்றி வளைத்தனர்.

பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டார்கள். இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. அதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் மூலம் பயங்கரவாதிகள் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News