செய்திகள்
பிரதமர் மோடி

பொருளாதார பேரழிவை உருவாக்கிவிட்டது மோடி அரசு - எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

Published On 2020-01-13 14:04 GMT   |   Update On 2020-01-13 14:04 GMT
மோடி தலைமையிலான பாஜக அரசு நாட்டின் பொருளாதாரத்திற்கு பேரழிவை உருவாக்கிவிட்டது என காங்கிரஸ் கட்சி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுடெல்லி: 

காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உள்பட 20 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் குடியுரிமை திருத்தச்சட்டம் உள்ளபட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவையாவன:-

குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை இந்திய அரசியலமைப்புக்கு எதிரானவை. இவை அனைத்தும் ஏழைகள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுத்தப்பட்டுள்ளது.



ஆகையால், குடியுரிமை திருத்தச்சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெறவேண்டும். நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ள தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கிடும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவேண்டும்.  

நரேந்திர மோடி தலைமையிலான தவறான பொருளாதார கொள்கையினால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மந்தமடைந்து ஜிடிபி வளர்ச்சி மிகவும் மோசாமான நிலையில் உள்ளது. 

இதனால் 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. மோடியின் அரசு பொருளாதார பேரழிவை உருவாக்கிவிட்டது.
Tags:    

Similar News